ஒலுவில் கடலில் குளிக்க சென்ற மாணவிகளில் ஒருவர் பலி-மற்றவர் மீட்பு..!

 

நேற்று ஒலுவில் கடற்கரையில் இரண்டு சிறுமிகள் குளித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட துயரச்  சம்பவத்தில் ஒரு சிறுமி உயிரிழந்தது மற்றொரு சிறுமி தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

 இச்சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில்   பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கடற்கரையில் பிள்ளைகள் குளிக்கும் பெற்றோர்கள் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் நினைவூட்டுகிறது.

 தயவுசெய்து உங்கள் பிள்ளைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள் கடற்கரை பகுதிகளில் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள். 

ஒலுவில் 04 ம் பிரிவு மன்ஜோனா வடி வீதியைச் சேர்ந்த F.பாத்திமா ஹிக்மா (12 வயது) என்பவர் இன்று வபாத்தாகிவிட்டார்.

அன்னார், பாஹிம் மற்றும் AB. றிஸ்லா ஆகியோரின் புதல்வி ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் அறிவிக்கப்படும்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post