சீனி - விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

 


இலங்கையில் சீனி விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு இந்தியா எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, இலங்கைக்கு ஏனைய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வது குறித்து தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 15ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த ஏற்றுமதித் தடை எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு அதிகளவில் சீனி இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தத் தடையின் காரணமாக வேறு நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரூபாயின் மதிப்புடன் ஒப்பிடுகையில் டொலரின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாகவே தற்போது சந்தையில் சீனியின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்தியமை சீனி விலை அதிகரப்பிற்கு காரணமல்ல என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post