யாழில் நேற்றைய தினம் (29) ஆண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 35) எனாபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றிரவு உறக்கத்துக்கு சென்றுள்ளார். அவர் சங்கானை சந்தையில் வியாபாரம் செய்கின்றவர் என்பதால் அவரை வியாபாரத்துக்கு அனுப்புவதற்கு உறவினர்கள் இன்று காலை எழுப்ப முற்பட்டவேளை அசைவற்று காணப்பட்டார்.
இந்நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.