மனம் நொந்து உயிரிழந்த மாணவி-கணித ஆசிரியரை காப்பாற்ற முயலும் அநுர அரசு..!

 

சரோஜா போல்ராஜ் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சருக்கான பொறுப்பிலிருந்து விலகி, சர்ச்சைக்குரிய மேலதிக வகுப்பு ஆசிரியைப் பாதுகாக்கும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். எனவே அவர் இந்த அமைச்சுப்பதவியை வகிப்பதற்கு பொறுத்தமற்றவர். சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (9) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போது பேசுபொருளாகியுள்ள கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட பாடசாலை மாணவி தொடர்பில் பெண்ணாக, தாயாக, ஆசிரியராக, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சரோஜா போல்ராஜ் பொறுப்பின்றி செயற்படுகின்றார்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரான அவர் அமைச்சர் என்ற பொறுப்பிற்கும், அரசாங்கம் என்ற பொறுப்பிற்கும் அப்பால் செயற்பட்டுக் கொள்கின்றார். பாடசாலையில் துன்புறுத்தலுக்கு உள்ளானதோடு மாத்திரமின்றி, மேலதிக வகுப்பொன்றிலும் துன்புறுத்தலுக்கு உள்ளான குறித்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார் என அமைச்சர் குறிப்பிடுகின்றார்.


அந்த மாணவி உள ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என்பதற்காக இந்த சம்பவம் மூடி மறைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறுகின்றாரா? இது தொடர்பில் கேள்வியெழுப்புவதற்காக பாராளுமன்றத்தில் நான் முயற்சித்த போது சபாநாயகர் உட்பட ஆளுங்கட்சியினர் எவரும் எனக்கு கருத்து தெரிவிப்பதற்கு வாய்ப்பளிக்கவில்லை.

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் முன்னிலையான குறித்த மேலதிக வகுப்பு ஆசிரியரைப் பாதுகாப்பதற்காகவா அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது? மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் அமைச்சுப் பதவியிலிருந்து விலக வேண்டும். அவர் இந்த சம்பவம் தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையில் இந்த அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு அவர் பொறுத்தமற்றவர் என்பது தெளிவாகியுள்ளது. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post