கொழும்பில் நேர்ந்த விபத்து-பெண் பலி..!

 

கொழும்பு - தலங்கமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை - பொறள்ளை வீதியில் தலவத்துகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கமை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பொறள்ளையிலிருந்து கொட்டாவை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியில் பயணித்த வயோதிபப் பெண் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண் கொஸ்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கண்டி - கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய வயோதிபப் பெண் ஆவார்.