திடீர் அதிஸ்ரத்தால் வாழ்வே மாறப்போகும் அந்த ஒரு ராசி நீங்களா..!

 ஆங்கில புத்தாண்டு, தமிழ் புத்தாண்டு, சனிப்பெயர்ச்சி என்று 2025 ஆம் ஆண்டின் பல முக்கிய நிகழ்வுகளை கடந்துவிட்டோம். அதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிரகங்களின் பெயர்ச்சி இருப்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது மகர ராசியில் ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

 இந்த மாதம் குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. வருடக்கணக்கில் பெயர்ச்சி ஆகும் சனி, குரு, ராகு - கேது மட்டுமல்லாமல் மாத மாதம் பெயர்ச்சியாகும் கிரகங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி 7 கிரகங்களின் பெயர்ச்சி உள்ளது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

சித்திரை பிறந்துள்ளது. புதிய நிதியாண்டு பிறந்துள்ளது. விரைவில் புதிய கல்வியாண்டும் பிறக்கவுள்ளது. இதனால் பல திட்டங்களுடன் மே மாதத்தை எதிர்பார்த்து காத்திருப்போம். அந்த வகையில் மே மாதத்தில் மகர ராசியினர் பெறப் போகும் பலன்களை காணலாம். மகரம் உடலால், மனதால், ஆத்ம ரீதியாக வலுவாக இருக்கக் கூடியவர்கள் மகர ராசியினர்.

 

இந்த மே மாதம் முழுவதும் மிகப்பெரிய விடுதலையை அடையப் போகிறீர்கள். குழப்பிக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் படிப்படியாக நிகழும். ஏழரை சனி முடிந்திருந்தாலும் சிறு சிறு பாதிப்புகளை சந்தித்து வருவீர்கள். மே 15 ஆம் திகதிக்குப் பிறகு இந்த நிலைமை மாறும். 8 ஆம் அதிபதி உச்சமாகியிருப்பதால், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ஞானத்தைக் கொடுக்கக் கூடிய நேரமாக இருக்கும். துணை அல்லது துணைவியாரின் உடல்நிலையில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. கால், வயிறு, தலை சம்பந்தப்பட்ட இடங்களில் மிகுந்த கவனம் தேவை. 8 இல் கேது வருவதால் ஆரோக்கியம், குடும்பம், பேசுகின்ற வார்த்தையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏழரை சனி விலகியுள்ளதால் இனி முன்னேற்றமான காலகட்டமாக இருக்கும்.

 

அவமானப்படுத்தியவர்கள் எல்லாம் உங்களை தேடி வருவார்கள். இழந்தவற்றை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். தாய், கணவன், உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை. நிறைய மன அழுத்தம், டென்சன் போன்றவை முதல் 15 நாட்களுக்கு ஏற்படும்.

 

மே 15 ஆம் திகதிக்குப் பிறகு அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். நம்பிக்கை அதிகரிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கம். துணை அல்லது துணைவியாருடன் இணக்கம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் சேருவதற்கான வாய்ப்புள்ளது. திடீர் அதிர்ஷ்டத்தால் மகிழ்ச்சி உண்டாகும். கேட்க தயங்கிய விஷயங்கள் கூட உங்களுக்கு நிகழும் வாய்ப்புள்ளது.

 

தொழிலில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த விஷயங்களில் மேன்மை அடைவீர்கள். வம்பு,வழக்கு, சொத்து பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வீடு, வாகனம், மனை, இடமாற்றம் நிகழும். 2 இல் ராகு வரவால் பேச்சில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் நல்ல மாற்றம் உண்டாகும். மே 15 ஆம் திகதி வரை எடுக்கும் முடிவுகளை மிகவும் கவனமாகவும், யோசித்தும் எடுக்கவும் வேண்டும்.

 

உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. முயற்சி செய்தால் பண வரவு கொட்டக் கூடிய நேரமாக இருப்பதால் முயற்சிகளில் கவனம் செலுத்துவது நல்லது. இதுவரை இல்லாத தன்னம்பிக்கை, தைரியம் உண்டாகும். சவால்கள், பிரச்சனைகளை கடந்து செல்லக்கூடிய அத்தனை தைரியத்தையும் கொடுக்கும். உடல்நிலை, மனநிலையில் கவனமாக இருப்பது நல்லது. வண்டி வாகனங்களில் வித்தைகளை காட்டுவதை தவிர்ப்பது நல்லது. இரவு நேர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. கேட்காமலேயே உதவிகள் உங்களைத் தேடி வரும். தந்தை, இஷ்ட தெய்வம், குருமார்கள், குலதெய்வம் மூலமாக ஆதரவு ஆதாயம் உண்டாகும். குருவருளும், திருவருளும் கிடைக்க கூடிய மாதம். பணத்துக்குப் பஞ்சமே இருக்காது.

 

மாணவர்களைப் பொருத்தவரை உங்கள் உழைப்புக்கேற்ற பலனை கட்டாயம் பெறுவீர்கள். படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. அக்டோபர், நவம்பருக்கு மேல் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

 

25 - 30 வயதுள்ளவர்கள் கவலைப்படுவதற்கான சூழல் உண்டாகும். பழைய விஷயங்களை எல்லாம் சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். அதனை கைவிடுவது நல்லது. 35 - 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். கடனை வாங்கி தவித்துக் கொண்டிருந்தவர்கள் அதில் இருந்து விடுபடுவீர்கள். வேலையில் சிரமத்தை சந்தித்து வந்தவர்கள் எல்லாம் இனி அதில் இருந்து மீண்டு வருவீர்கள். 40 - 55 வயதுள்ளவர்கள் உடல் நிலையில் கவனமாக இருப்பது நல்லது. கால் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூச்சு , நெஞ்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post