இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் ராய்பாக் தாலுகாவுக்கு உட்பட்ட மேகாலி கிராமத்தில் ராமர் கோவில் பூசாரியாக இருப்பவர் லோகேஸ்வரா மகராஜ்.
இவர், 17 வயது சிறுமி ஒருவரை, வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுகிறேன்,லிப்ட் தருகிறேன் என கூறி அவரை காரில் அழைத்து ராய்ச்சூரில் விடுதிக்கு கொண்டு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
தொடர்ந்து, பாகல்கோட்டில் உள்ள விடுதிக்கு கொண்டு சென்று மற்றொரு முறை அவரை வன்புணர்வு செய்துள்ளார்.
வீட்டுக்கு சென்ற சிறுமி நடந்ததை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனை தொடர்ந்து பூசாரிக்கு எதிராக பாகல்கோட்டில் உள்ள நவநகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போக்ஸோ பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.