காலி - அஹுங்கல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் இருந்த 10 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றை திருடியதாக கூறப்படும் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அஹுங்கல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.