கொழும்பில் மீண்டும் குடியேறப் போவதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலையை விட்டு வெளியேறி கொழும்புக்கு திரும்பும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும், தேவைகளுக்கு ஏற்ப கொழும்புக்குச் செல்ல வேண்டியிருக்கலாம் என்று மகிந்த தெரிவித்துள்ளார்.
