கடலின் மூர்க்கம்-நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்-இலங்கை விமானப்படை அதிரடி..!

பலப்பிட்டி கடற்கரையில் கடல் கொந்தளிப்பு காரணமாக ஆபத்தை எதிர்கொண்ட டிங்கி படகில் இருந்த மூன்று மீனவர்களை இலங்கை விமானப்படை (SLAF) மீட்டுள்ளது.

ரத்மலானவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பெல் 412 ஹெலிகொப்டர் மீட்புப் பணிக்காக அனுப்பப்பட்டதாக விமானப்படைதெரிவித்துள்ளது.

குறித்த மீனவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் உத்தரவிற்கமைய மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று காரணமாக கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post