பிரியாணிக்கு பின் தர்பூசணி ...உயிரிழப்புக்கு காரணம் அது இல்லை ; திடுக்கிடும் தகவல்

Nila

இந்திய மும்பையின் பைதோனி பகுதியில், இரவு சிக்கன் உணவைச் சாப்பிட்ட பிறகு உணவிற்குப் பின்னர் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உணவு நஞ்சானதால் உயிரிழந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

தர்பூசணிக்கும் உயிர் இழப்பும் தொடர்பில்லை என மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்திருக்கிறது.இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் கூறியுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை இரவு 10:30 அளவில் நடைபெற்ற விருந்தில் குடும்பத்தினர் பிரியாணி சாப்பிட்டு பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். அதிகாலை 5 மணியளவில் குடும்பத்தினர் அனைவருக்கும் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்கள் சாப்பிட்ட தர்பூசணி பழத்தின் எஞ்சிய பகுதிகள் ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டது.இந்த நிலையில் உடற்கூறு ஆய்வில், இதயம் மற்றும் மூளை உள்ளிட்ட உள் உறுப்புகள் பச்சை நிறமாக மாறியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உடலில் நச்சுத்தன்மை இருந்ததும் தெரியவந்த நிலையில் இது உயிர்மாய்ப்பு என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.