யாழில் டக்லஸ் மீது தாக்குதல்-தாக்குதல்தாரியை வீடு புகுந்து நைய புடைத்த ஆதரவாளர்கள்..!

 யாழ். ஊர்காவற்றுறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்றவர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 ஊர்காவற்றுறை, கரம்பன் பகுதியில் நேற்று மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது அந்தப் பகுதிக்குச் சென்ற முன்னாள் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் குழப்பம் விளைவிக்கும் வகையில் அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழில் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் ! | Attempted Attack On Douglas Devananda In Jaffna

பலர் சமரசம் செய்ய முயன்றபோதும், அதனை ஏற்க மறுத்து, டக்ளஸ் தேவானந்தாவை நெருங்கித் தர்க்கத்தில் ஈடுபட்ட அவர், திடீரென டக்ளஸ் தேவானந்தா மீது தாக்க முற்பட்டதுடன் கூட்டத்தினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியில் பிரசார நடவடிக்கை நிறைவடைந்த பின்னர், அந்த நபரின் வீட்டிற்கு சென்ற சிலர் அவரை தாக்கியுத்ளனர்.

இதனால் படுகாயமடைந்த அவர் ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post