நீர்கொழும்பு, தலதுவ, பகுதியில் இரண்டு நபர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்து, துப்பாக்கிச்சூடாக மாறியுள்ளது.
குறித்த வாக்குவாதத்தில் இரண்டு நபர்களில் ஒருவர் மற்றொருவரின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய 53 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருவரும் வாட்ஸ்அப் தொடர்பாக ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர், என்றும் இன்று மதியம் அவர்கள் சந்தித்தபோது, துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.