பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யவும், இலங்கையின் தென் மாகாணத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக செயற்படவும் இவ்வாறு விசேட மோட்டார் சைக்கிள் படையணி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.