யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசமான முல்லைத்தீவு விசுவமடுவின் இளங்கோபுரத்தை சேர்ந்த மோகன் விதுர்சிகா முல்லைத்தீவு மாவட்டத்தில் கணித பிரிவில் 8வது நிலையை அடைந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.
இது குறித்து மாணவி கூறுகையில்தனது ஆரம்ப கல்வியை தேராவில் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று பின்னர் உயர் தர கல்வியை விசுவமடு மகா வித்தியாலயத்தில் கற்றுள்ளதாகவும் , தமது கிராமத்தில் மேலதிக வகுப்புக்கள் எதுவுமின்றி இருந்தபோது முல்லைத்தீவு வலய கல்வி பணிப்பாளர் திரு . தமிழ்மாறன் அவர்கள் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பினரால் யாழ் இந்து ஆசிரியர்களின் கற்பித்தலில் நடாத்தும் ZOOM வகுப்பு பற்றி அறிமுகப்படுத்தியிருந்தார் . இதில் முழுமையாக இணைந்து கொண்டு உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவாயுள்ளார் என்றும் அத்தோடு தனக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பிற்கும் திரு சுகுமார் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார் .
நாளாந்த வேலைக்காக சென்று குடும்பத்தை பார்த்து வந்த மாணவியின் தந்தை ஒரு விபத்தில் சிக்கி காயமடைந்து இருந்த போதும் பல சிரமங்களுக்கு மத்தியில் வசதிகளற்ற கிராமத்திலிருந்து குறித்த மாணவி பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளார் .
அத்தோடு மாணவி மேலும் கூறுகையில்
தன்னை போன்ற வசதிகளற்ற சாதிக்க வேண்டும் என்று எண்ணும் மாணவர்கள் இவ்வாறு நடாத்தப்படும் ZOOM தொழிநுட்பம் ஊடாக நடத்தப்படும் வகுப்புக்களில் மேலதிக கற்கையை மேற்கொண்டு தான் போன்று உயர் கற்கை நெறிகளுக்கு தெரிவாதற்குரிய சந்தர்பங்களை உருவாக்கி கொள்ளலாம் என குறிப்பிட்டார் .