திருடுவதற்கு ஆலயத்தினுள் நுழைந்தவர் சடலமாக மீட்பு..!

 காலி - மீட்டியாகொடை பிரதேசத்தில் உள்ள சீனிகம ஸ்ரீ மகா தேவோல் தேவாலயத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (6) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மீட்டியாகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தேவாலயத்தில் உள்ள சிலை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற இரத்தினத்தை திருடுவதற்காக தேவாலயத்திற்குள் நுழைந்திருந்த போது ஏதேனுமொரு காரணத்தினால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தேவாலயத்தின் ஒரு ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post