களுத்துறை மாவட்டம் பாணந்துறை, வேகட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று (29) காலை இடம்பெற்றுள்ளது.
பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்த பணியாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.