நாட்டில் நிலவும் மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ள மவுஸ்சாகலை தோட்ட சீட்டன் பிரிவில் நேற்று (28) இரவு வீசிய கடும் காற்று காரணமாக மின் கம்பம் ஒன்று சரிந்து வீட்டின் மேல் விழுந்ததுள்ளது.
இதன் காரணமாக அப் பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. திடீரென வீசிய காற்று காரணமாக இரும்பினால் பொருத்தப்பட்ட மின் கம்பம் வீட்டு கூரைக்கு மேல் விழுந்ததுள்ளது.
இதன்போது வீட்டில் இருந்தவர்கள் எவ்விதமான காயமும் இன்றி தெய்வாதீனமாக தப்பியுள்ளதாக பிரதேச கிராம உத்தியோகத்தர் தெரிவித்தார்.