Type Here to Get Search Results !

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு இடி-பதறிய மக்கள்..!

இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆபரேஷன் சிந்துர் என்ற பெயரில் இந்தியா - பாகிஸ்தான் மீது டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானும் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 

இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 01.44 மணிக்கு பூமிக்கு 10 கி.மீ ஆழத்தில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் (ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது), இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD