Type Here to Get Search Results !

இன்று ஒரு மணிக்கு பிறகு பலத்த சம்பவம் உண்டு..!

 

மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும் மேல் மாகாணத்திலும், புத்தளம், காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிததுள்ளது 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்

மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும்.

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD