நபரொருவர் முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்துக் கொலை : ரக்வானையில் நடந்த கோர சம்பவம்!!

இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரக்வானை, ஹொரமுல்ல பிரதேசத்தில் நபரொருவர் முச்சக்கரவண்டியுடன் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம்  வியாழக்கிழமை (29.05.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கொலைசெய்யப்பட்டவர் இரத்தினபுரி, ரில்ஹேனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது தீயில் நன்கு கருகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியானது முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கஹவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post