ஓட்டமாவடி தியாவட்டுவான் பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
வாழைச்சேனை , பிறைந்துரைச்சேனை பகுதியை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் விமான நிலையம் சென்று திரும்பி வரும் வழியில் மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி தியாவட்டுவான் அறபா வித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள மதகில் மோதுண்டதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது வேனில் பயணித்த நான்கு பெண்கள் இரண்டு குழந்தைகள் உள்ளடங்களாக பணிரெண்டு பேரும் காயமடைந்துள்ளதுடன் அனைவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்காரணமாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபையின் பிரதான நீர் குழாயில் சேதமேற்பட்டுள்ளதாக அதிகார சபையின் அதிகாரி தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.