தடம் புரண்ட ஆட்டோ-20 வயது யுவதி பலி..!

 

வீதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதில் இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து கேகாலை மாவட்டம், ருவான்வெல்லை பிரதேசத்தில் நேற்று (18) புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் சாரதி உட்பட நால்வர் பயணித்தனர் எனவும், வகிபத்தின் போது சாரதியும், இரண்டு பயணிகளும் காயங்களுடன் உயிர் தப்பினர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளன

காயங்களுடன் உயிர் தப்பிய இரு பயணிகளும் உயிரிழந்த இளம் யுவதியின் உறவினர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் வறக்கப்பொலையைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த இரு உறவினர்களும், முச்சக்கர வண்டி சாரதியும் ருவான்வெல்லை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post