பொலிஸ் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்ற, துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியின் போது பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் மூவர் காயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கலாசாலையில் நடைபெற்றுள்ளது.
பயிற்சி நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது, துப்பாக்கிச் சன்னம் அங்கிருந்த தகடு ஒன்றின் மீது பட்டு அதன் துண்டுகள் வீசியெறியப்பட்டதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது அதிரடிப்படையின் களுத்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.