சனிக்கிழமை, 21 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
தனவரவு அதிகரிக்கும். மாணவர்கள் ஆராய்ச்சி மனப்பான்மையோடு செயல்படுவீர்கள். நல்லோரின் தொடர்பு நலத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். கடல் கடந்த வணிகங்கள் இலாபம் அளிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
வீண் செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்கிக் கஷ்டப்பட நேரும். வீண் வம்புகள் விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குடும்பத்தினரிடையே ஒற்றுமை குறையும்.
மிதுனம்
gemini-mithunum
வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழும் கூட்டாளிகளால் இலாபம் ஏற்படும். பெரிய கதாநாயகனாக எண்ணிக் கொள்வதையும், தியாக மனப்பான்மையும் கை விடுவது நல்லது.
கன்னி
virgo-kanni
வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறவுகளிடையே மனைவியால் மனக்கசப்பு உருவாகலாம். வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து நடந்தால் இலாபம் அதிகரிக்கும்.
மகரம்
capricorn-magaram
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. வாகன சுகம் குறையும். எதிர்பார்த்த தனவரவு இன்றி கடன் வாங்க நேரும்.
கடகம்
cancer-kadagam
வெற்றி மேல் வெற்றி வரும் நாள். அரசு அதிகாரிகள் மூலம் எதிர்பார்த்த அனைத்து வேலைகளும் அனுகூலமான திசைகளிலும் நகரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து நல்ல தேர்ச்சி அடைவர்.
சிம்மம்
leo-simmam
நிதி நிலைமையில் நல்ல ஏற்றம் தெரியும். தங்கள் மனையாள் இனிய மாற்றங்களையும், இன்பப் பயணங்களையும் விரும்புவார். மாணவர்கள் கல்வியில் நல்ல தேர்ச்சி பெறுவர்.
துலாம்
libra-thulam
பெற்றோர்களால் நன்மை பல பெறுவீர்கள். மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். விவசாயம் மூலம் இலாபங்கள் அதிகரிக்கும். வாகன யோகம் உண்டு.
மீனம்
pisces-meenam
வரவுக்கு மிஞ்சிய சமாளிக்க முடியாத செலவுகள் ஏற்படும். குடும்பத்தாரிடம் சுமுகமாக இருந்தால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
தனுசு
sagittarius-thanusu
கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகள் திருப்தி அடையமாட்டார்கள். ஏதாவது ஒரு சிந்தனையில் மனம் உழன்று கொண்டிருக்கும். சூழ்நிலை மாற்றத்தையும் விரும்புவீர்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
சுகமும், பாக்கியமும் விருத்தியாகும். மனதில் உறுதியும், புதிய உற்சாகமும் உண்டாகும். பகைவர்கள் விலகி ஓடுவர். மனைவியின் முழு ஒத்துழைப்புக் கிடைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரித்தால் மன தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை புதிய உற்சாகம் தரும். தொழில் விரிவாக்கத்துக்கு வங்கி கடன்கள் கிடைக்கும்.