நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக உலாவிய இரு இளைஞர்கள் - வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைப்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை பேக்கரி ஒழுங்கையில் சந்தேகத்திற்கிடமாக உலாவிய இரு இளைஞர்களைப்பிடித்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (21) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர்கள் இருவரும் கிரான், சந்திவெளிப் பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் எனத்தெரிய வருவதுடன், அவர்களது கையிலிருந்த பையில் கையுறை, முகமூடி, மிளகாய்த்தூள் என்பனவும் காணப்பட்டுள்ளது.
திருட்டுச்சம்பவத்தில் ஈடுபடும் நோக்கில் நடமாடினார்களா? எனும் சந்தேகத்தில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.