கோவில் திருவிழாவில் நேர்ந்த விபரீதம்-2 பெண்கள் உட்பட மூவர் பலி..!

 

இந்தியாவின், ஒடிசாவில் உள்ள பூரி ஜகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரையின் போது, இன்று அதிகாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூவர் உயிரிழந்ததுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களில் 2 பெண்களும், 70 வயதுடைய ஆணொருவரும் அடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கோயில் திருவிழாவில் நேர்ந்த அசம்பாவிதம் ;மூவர் பலி, பலர் படுகாயம் | Tragedy At Temple Festival Many Seriously Injured

கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த வருடாந்திர விழாவின் மூன்றாவது நாளில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post