விபச்சார விடுதியில் சிக்கிய இருவர்..!

 கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் அத்திட்டிய பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை சோதனையிட்டபோது இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (28) இடம்பெற்றுள்ளது.

விபச்சார விடுதியில் சிக்கிய இருவர் ; விசாரணைகள் தீவிரம் | Two Caught In Brothel Investigations Intensified

இதன்போது, விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த சந்தேக நபரும், விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனவும், பெண் சந்தேக நபர் மடபத்த பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவம் குறித்து கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.