தித்திக்கும் திங்களில் உங்கள் ராசிபலன் எப்படி..!{30.6.2025}

 

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
வீட்டில் முக்கியமான பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. மனைவி, மக்களின் ஆரோக்கிய நிலையில் அக்கறை செலுத்துங்கள். பயணத்திலும் எச்சரிக்கை தேவை.
ரிஷபம்
taurus-rishibum
முதலீடுகளைப் பார்த்து, யோசித்து செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். தண்ணீரில் விளையாடுவதை தவிருங்கள். காரியத்தடைகள் காரணமாக தூக்கம் குறையும்.
மிதுனம்
gemini-mithunum
பொன் ஆபரணங்கள் சேரும். குழந்தைகளின் ஆர்வங்களை அறிந்து அந்தத் துறையில் கவனம் செலுத்துங்கள். மனைவி கருத்தரித்தல் போன்று மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும்.
கன்னி
virgo-kanni
உறவுகளின் செயலால் வெறுப்பு உண்டாகும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்காதிருப்பது நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும். வெற்றிக்கு கடின உழைப்பு தேவை.
மகரம்
capricorn-magaram
அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லவும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பதே முன்னேற்றம் தரும். வழக்கு விவகாரங்கள் அனைத்தையும் ஒத்திப் போடுவது நல்லது.
கடகம்
cancer-kadagam
இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். தோல்வி கண்டு துவளாதீர்கள். முயற்சி முன்னேற்றம் தரும்.
சிம்மம்
leo-simmam
தங்கள் சம்பாத்திய நிலை உயரும். மிகவும் கடினமான செயல்களை கூட எளிதாக, வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள்.
துலாம்
libra-thulam
தன லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த குடும்பத்தோடு இணைந்து மகிழ்வீர்கள். எல்லா வகையிலும் மகிழ்ச்சி மிக்க நாள்.
மீனம்
pisces-meenam
தனவரவு கூடும். நீங்கள் எடுக்கும் திடமான முடிவுகளால் வெற்றி உங்களைத் தேடி வரும். “நண்பேண்டா” என்று நண்பர்கள் கை கொடுக்கும் நாள். தேவைகள் அனைத்தும் நிறைவேறி தெம்பாய் இருப்பார்கள்.
தனுசு
sagittarius-thanusu
தெய்வ நம்பிக்கை அதிகமாவதின் காரணமாக மனஅமைதி கூடி, மனச்சுமைகள் குறையும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.மன தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
புனிதப் பயணங்கள், கோயில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவும் உத்தியோக உயர்வு உண்டு.
கும்பம்
aquarius-kumbam
பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post