வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகளை விடுவிக்கக் கோரி உரிமையாளர்கள் போராட்டம்!

 

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமாண்டோ" பங்களா முன்பாக இன்று வெள்ளிக்கிழமையும் கவனவீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பாரம்பரியக் குடியிருப்புகளையும் வாழ்வாதாரக் காணிகளையும் தமக்கு உடனே திருப்பித் தர வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இன்றைய போராட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டு, மக்களின் கோரிக்கைகளுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தார். 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post