பிரேசிலில் இராட்சத பலூன் விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பலூனில் 21 பேர் இருந்ததாகவும், சம்பவத்தில் காயமடைந்த 13 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இராட்சத பலூனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதுடன், அதனை இயக்குபவர் பலூனை கீழே இறக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.
பலூனில் இருந்த பலர் வெளியே குதித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.