Type Here to Get Search Results !

கழிப்பறையில் திடீரென கேட்ட அலறல் சத்தம்-தொழிலதிபருக்கு காத்திருந்த பயங்கரம்..!

இரவில், கழிப்பறை பயன்படுத்த சென்ற தொழிலதிபர் சிங்கம் தாக்கி உயிரிழந்துள்ளார். 

நமீபியாவை சேர்ந்த 59 வயது தொழிலதிபரான பெர்ன்ட் கெபல், நமீபியாவில் உள்ள பாலைவன சிங்கங்களை ஆதரிப்பதற்காக பெருமளவிலான பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்.


இந்நிலையில், கடந்த மே 30ஆம் திகதி, விடுமுறையைக் கழிப்பதற்காக, செஸ்ஃபோன்டைன் (Sesfontein) பகுதியில் உள்ள ஹோனிப் ஸ்கெலிட்டன் கோஸ்ட் கேம்ப் பகுதியில், தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் ஒரு காரின் மேல் சிறிய கூடாரம் அமைத்து கெப்பல் தங்கியியுள்ளார்.


இரவில், கழிப்பறை செல்வதற்காக அவர் கூடாரத்தில் இருந்து கீழே இறங்கிய போது, சிங்கம் ஒன்று அவரை தாக்கியுள்ளது. அவரின் அலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் சிங்கத்தை முயன்றனர். ஆனால் அதற்குள் கெபல் உயிரிழந்து விட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நமீபியா காவல்துறை தெரிவித்துள்ளது.


2023 ஆம் ஆண்டு அந்த பகுதியில் 60க்கும் மேற்பட்ட சிங்கங்கள் இருந்துள்ளது. தற்போது மனித மோதல்கள் காரணமாக அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad