காதலியை அழைக்க சிறுவன் கைபேசி தர மறுத்த காரணத்தினால்-கழுத்தை நெரித்து கொன்று விட்டு பெரியப்பா ஆடிய நாடகம்..!

 

தமிழக மாவட்டம் விருதுநகரில் சிறுவனை பெரியப்பா கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியைச் சேர்ந்தவர் ராமர் (54). இவரது வீட்டின் அருகே தம்பியின் குடும்பம் வசித்து வருகிறது. இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த தம்பி லட்சுமணின் 13 வயது மகன் கார்த்திக், கழுத்தில் சேலை சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.


வீடு திரும்பிய லட்சுமணனும், அவரது மனைவியும் மகனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது சிறுவன் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது. 


பின்னர் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், சிறுவன் கார்த்திக்கின் பெரியப்பாவான ராமர்தான் கொலை செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது.


அவரை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தியபோது, தனது காதலியை வீட்டிற்கு அழைக்க ராமர் சிறுவனிடம் செல்போன் கேட்டுள்ளார். 


ஆனால் சிறுவன் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த ராமர், அவனை அடித்து உதைத்து கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார்.


இதில் சிறுவன் உயிரிழக்க, சேலையை சுற்றி விளையாடியபோது கழுத்து இறுக்கப்பட்டு சிறுவன் கார்த்திக் இறந்துவிட்டதாக அனைவரிடமும் ராமர் கூறியது தெரிய வந்தது.


இதனைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post