விமான விபத்து-அச்சத்திலிருந்து விடுபடாத ஊர் பெண்கள்-அருந்தப்பில் தப்பி பிழைத்தவர்களின் பகீர் தகவல்கள்..!

 

அகமதாபாத் விமான விபத்து நேரிட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில், விபத்து நேரிட்ட இடத்தைச் சுற்றிலும் வசிப்போர் அச்சமான சூழலுடன் உள்ளனர்.

இந்த விபத்து காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் மனதளவில் பீதியுடன் இருப்பதை உணர முடிகிறது. விபத்தானது அங்குள்ள மக்களின் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. விபத்து நேரிட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளில் வாழ்வோரும் பாதிக்கப்பட்டள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்கள்

விமான விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உணவு விடுதியில் சமையலர்களாக வேலை பார்க்கின்றனர். அவர்களில் ஒருவரான கீதா பென்னும், அங்கு சமையலராக பணியாற்றுகிறார். பெரும்பாலும் அவர் உணவு விடுதிக்கு மதிய ஷிப்டில் பணிக்கு வருவது வழக்கம்.

ஆனால், விபத்து நடைபெற்ற தருணத்தில், ஷிப்ட் நேரத்தில் வேறு ஒரு பணியாக மருத்துவமனை உணவு விடுதியில் இருந்து வெளியே சென்றிருந்தார். எனவே அவர் விபத்தில் சிக்காமல் உயிர் தப்பினார்.  

 "மருத்துவமனை விடுதிக்கு கீழே உள்ள பான் கடையில் தான் பெரும்பாலான நேரங்களில் அமர்ந்திருப்பேன். ஆனால், விபத்து நடந்த நேரத்தில் நான் வெளியே சென்றிருந்தேன். எனவே, நூலிழையில் உயிர் தப்பினேன். இதனை தெய்வீக அருளாகவே கருதுகின்றேன்,"என்றார்.

கீதா பென் மட்டுமின்றி, அவருடன் 10 பெண்கள் மருத்துவமனை விடுதியிலும், உணவு விடுதியிலும், அருகில் உள்ள கட்டடங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருமே அன்றைக்கு பிற்பகல் ஷிப்டில் பணியாற்றவில்லை. எனவே, அவர்கள் அனைவருமே உயிர் பிழைத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்கள் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

தலைக்கு மேலே ஏதேனும் விமானம் பறந்து சென்றால் கூட அது கீழே விழுந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாக கீதா பென் கூறுகிறார். விமானத்தின் சத்தமே ஒருவித பீதி உணர்வை ஏற்படுத்துகிறது. முதுகு தண்டை சில்லிட வைக்கிறது. மனதில் விபத்து குறித்த படங்கள் திரும்ப திரும்ப தோன்றுகின்றன என்கிறார்.

காஜல் என்ற இன்னொரு பெண்ணும் விபத்து நேரிட்ட பகுதிக்கு அருகில் வசிக்கிறார். அவர் விபத்தின் போது எழுந்த பெரும் சப்தத்தை கேட்டார். இந்த சத்தம் மீண்டும் மீண்டும் என் மனதுக்குள் தோன்றுகிறது. அடர்ந்த கரும் புகை எழுந்து செல்லும் காட்சியும் மனதில் தோன்றுகிறது. விபத்து காட்சிகளின் படங்கள் கண் முன்னே தோன்றுகின்றன என்று காஜல் சொல்கிறார்.

விபத்து நேரிட்டபோது எழுந்த சத்தம், ஏதோ சிலிண்டர் வெடித்ததால் நேரிட்டிருக்கு என்றே காஜல் கருதினார். ஆனால், சில நிமிடங்கள் கழித்தே அது விமான விபத்தால் எழுந்த சத்தம் என்பது அவருக்குத் தெரிய வந்தது. வழக்கமாக அந்த தருணத்தில் பணியாற்றும் இடத்துக்குச் செல்லும் அவர், அன்றைய தினம் வேலைக்குச் செல்லவில்லை. எனவே அந்த பேரழிவில் இருந்து தாம் காப்பற்றப்பட்டதாக கூறுகிறார் காஜல்.

ரேகா என்ற இன்னொரு பெண், விபத்து நேரிட்ட தருணத்தில், உடல் நலக்குறைவோடு இருந்ததால் மருந்து வாங்குவதற்காக மருந்தகத்துக்கு சென்றிருக்கிறார். மருந்து வாங்கி விட்டு திரும்பும் போது விபத்து நேரிட்டதை பார்த்தார். விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த பலர் பீதியில் அங்கும் இங்கும் ஓடினர். ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். அந்த தருணத்தில் தாம் வைத்திருந்த ரூ.10,000 பணத்தை காஜல் இழந்து விட்டார். மேலும் சிலர் இடித்து தள்ளியதில் கீழே விழுந்து விட்டார்.

ஆனால், பணம் காணாமல் போனது இப்போது ரேகாவுக்கு பெரிய கவலையாகத் தெரியவில்லை. "இதில் ஒரு பெரிய விஷயம் என்னவென்றால், கடவுள் எனக்கு மீண்டும் ஒரு மறுபிறவியை அளித்துள்ளார்,"என்றார் ரேகா.

விபத்து நடந்த தருணத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மெஸ்ஸில் குறைந்த அளவிலான மக்களே இருந்துள்ளனர். எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு மாணவர்கள், மருத்துவர்கள் விடுதியில் உணவருந்த சென்றிருந்தனர். விபத்து நேரிட்ட போது மிக சிலரே மெஸ்ஸில் இருந்துள்ளனர். எனவே, பலர் உயிர் தப்பி உள்ளனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post