காட்டுக்குச் சென்ற இருவரில் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், ஒருவர் மட்டுமே வீட்டுக்குத் திரும்பி உள்ள சம்பவம் டயகம பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேகமலை தோட்டத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான தங்கராஜ் சந்திரசேகரன் இதே தோட்டத்தை சேர்ந்த காந்தி தேவதாஸ் ஆகிய இருவரும் கடந்த 10 திகதி காட்டுக்கு செல்வதாக தத்தமது குடும்ப உறுப்பினர்களிடம் கூறிச் சென்றுள்ளனர். சென்ற இருவரும் அன்று இரவு வீடு திரும்பவில்லை.
11 திகதி அன்று மாலை 6 மணியளவில் காந்தி தேவதாஸ் என்ற இளைஞர். வேறு பாதை வழியாக தனது வீட்டிற்கு வந்துள்ளார் இவரின் உடம்பில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இரு குடும்பத்தை சார்ந்த உறவினர்கள், டயகம பொலிஸ் நிலையத்தில் 11 திகதி காலை இருவரையும் காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து வீடு திரும்பிய காந்தி தேவதாஸ் இடம் பொலிஸார் தீவிர விசாரணையை முன்னெடுத்து வருவதோடு. காணாமல் போயுள்ள தங்கராஜ் சந்திரசேகரனை வனப்பகுதியில் தேடும் நடவடிக்கையில் பிரதேச மக்கள் டயகம பொலிஸ் அதிகாரிகள் கடந்த 11,12 மற்றும்13 ஆகிய மூன்று நாட்களும் காலை முதல் மாலை வரை தேடிய போதிலும் இதுவரை காணாமல் போனவரை கண்டுபிடிக்கவில்லை.
அத்தோடு காந்தி தேவதாஸிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அவர், முன்னுக்கு பின் முரணான தகவல்களை வழங்குவதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வருகிறது.
வனப்பகுதியில் காணாமல் போய் இருக்கின்ற இளைஞனை தேடும் பணியில் பொலிஸாருடன் இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் கடந்த மூன்று நாட்களாக தொழிலுக்கு செல்லாமல் ஈடுபட்டு வருகின்றனர்.