வவுனியாவில் பற்றி எரிந்த வீடு-பதறி ஓடிய வீட்டார்-வெளியான அதிர்ச்சி காரணம்-அவதானம் மக்களே..!

 

வவுனியா - பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று காலை 8.00 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வீட்டிலுள்ள பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதற்காக தேங்காய் எண்ணெய் என நினைத்து விளக்கினுள்  பெற்றோலை ஊற்றியமையினால், 

பூஜை அறையில் தீப்பற்ற ஆரம்பித்தமையுடன் அவ் தீப்பரவல் வீடு முழுவதும் பரவத் தொடங்கியது.

உடனடியாக விரைந்த மாநகர தீயணைப்பு பிரிவினர் பொதுமக்களின் உதவியுடன் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் சில பொருட்களும் தீயில் கருகி நாசமாகியுள்ளன. 

சம்பவ இடத்திற்கு மாநகரசபை முதல்வர், துணை முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post