புதன் பெயர்ச்சி-வாழ்வே திசை மாறப்போகும் ராசிகள்..!

2025 இல் புதன் பெயர்ச்சியில் அறிவாற்றலை அள்ளி வழங்கும் கிரகமான புத பகவான், ஜூன் 6-ம் திகதி, வெள்ளிக்கிழமையில் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் கிரகம் கடந்த மே 18 முதல் அஸ்தம நிலையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


அஸ்தம நிலையில் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் புதபகவான், ஜூன் 10ஆம் திகதி அன்று மிதுனத்தில் உதயமாகிறார்.  புதன் பெயர்ச்சியால் அற்புதமான விடியல் காத்திருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் என நாம் இங்கு பார்ப்போம்.


ரிஷப ராசி


புதனின் பெயர்ச்சி மற்றும் உதயம் காரணமாக, வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் பெருகும். பேச்சுத்திறன் மேம்படுவதால் காரியத்தை எளிதில் சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சில எதிர்பாராத பண ஆதாயங்கள் கிடைக்கும்.


சிம்ம ராசி


புதனின் உதயம், வாழ்க்கையில் ஒரு அற்புதமான மாற்றத்தை கொண்டு வரும். வேலையில் உங்களது திறமையை நிரூபித்து, அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெறுவீர்கள். முதலீடுகள் செய்வதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களுக்கு செலவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.


கன்னி ராசி


புதனின் உதயம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புடன், இலக்கை எளிதாக அடைவீர்கள். உங்கள் அந்தஸ்து உயரும். திறமைக்கான வெகுமதி காத்திருக்கிறது. உங்கள் நிர்வாகத் திறனுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.


விருச்சிக ராசி


புதனின் பெயர்ச்சி மற்றும் உதயம் எதிர்பாராத பணமுதாயத்தை கொடுக்கும். நிலுவையில் உள்ள பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வருமான ஆதாரங்கள் பெருகும். பணவரவு பொருளாதார நிலை உயர காரணமாக இருக்கும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.


மகர ராசி


புதனின் உதயத்தால் பல நன்மைகள் பெற்று, வாழ்க்கையில் விரும்பியதை பெறுவீர்கள். ஆடம்பரங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post