புதன்கிழமை, 11 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
நேர்மையுடன் நடக்க முயலுங்கள். கோபத்தால் குழப்பங்கள் அதிகமாகும். மனைவியின் புரிதல் இன்மையால், உறவுகளுக்குள் குழப்பம் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
இன்பச் சுற்றுலா வால் இதயம் மகிழும். நல்ல புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவுகளைச் சந்திப்பதால் மன மகிழ்ச்சி இரட்டிப்பாகும். ருசியான உணவு வகைகள் கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
மனை, வீடு ஆகிய சொத்துக்கள் அமையும். நல் ஆரோக்கியம் ஏற்படும். நல்ல நண்பர்களின் நட்பு மற்றும் அதனால் சந்தோஷமும் ஏற்படும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும்.
கன்னி
virgo-kanni
மனதினில் தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும். கைகளில் காசு தண்ணிபட்ட பாடுபடும். புதிய நண்பர்கள் சேர்க்கை புதிய உற்சாகம் தரும். தொழில் விரிவாக்கத்துக்கு அரசு உதவி கிடைக்கும்.
மகரம்
capricorn-magaram
பலவகைகளிலும் பண வருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். மனக்கசப்புகள் தீர்ந்து வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பு நலம் தரும்.
கடகம்
cancer-kadagam
பயணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தடைகள் ஏற்படலாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. வெற்றிக்கு வழி இல்லாத வகையில் வேதனைகளும் ஏற்படும்
சிம்மம்
leo-simmam
அன்புத் தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் யோசித்து செய்தால் ஏற்றம் உண்டு. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியங்கள் செய்யக்கூடாது. எதிர்பார்த்த இனங்களில் தனவரவு தாமதப்படும்.
துலாம்
libra-thulam
சோம்பலை விட்டு சுறுசுறுப்பாகச் செயல்பட்டால் சுய முன்னேற்றம் ஏற்படும். பணியில் அலட்சியப் போக்குகள் அல்லல் தரலாம். தொழிலில் முதலீடுகளைத் தள்ளிப் போடுவது நல்லது.
மீனம்
pisces-meenam
தெய்வ நம்பிக்கை அதிகரித்து தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புகழ் ஓங்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். உல்லாசப் பயணங்கள் மூலம் சந்தோஷம் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
கடின உழைப்பின் காரணமாக வேளாவேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
நல்லோர் நட்பு நல்வழி காட்டும். தனவரவு பெருகும். அரசுப் பணியில் உள்ளவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் எண்ணியபடி கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்படும் பணவரவால் மனத் திருப்தி உண்டாகும்.
கும்பம்
aquarius-kumbam
சங்கடங்கள் தீர்ந்து சந்தோஷ நாளாக அமையும். ஆசைப்பட்ட அனைத்தும் அகம் வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். பரிசுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை அடைவீர்கள்.