இந்தியாவின் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கருமாங்கழனி கிராமத்தில் பீகாரைச் சேர்ந்த நீரஜ் குமார் – காஜல் குமாரி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆரவ்குமார் (வயது 5) என்ற மகன் இருந்தார். இவர் கடந்த 9 ஆம் திகதி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சிறுவனின் தாய் காஜல் குமாரி ஸ்ரீபெரும்புதூர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் சிறுவனை தேடி வந்தனர்.
இதற்கிடையே, சிறுவன் அதே கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் இருந்து அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுவன் தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்து வந்த குடியிருப்பின் முன்பு உள்ள சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்தனர். அதில் சிறுவனை இளைஞர் ஒருவர் அழைத்து சென்றது பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில், அசாமைச் சேர்ந்த போல்தேவ் (22) என்பவரிடம் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
பொலிஸாரின் தீவிர விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. அதன்படி, சிறுவன் ஓரினசேர்க்கைக்கு மறுத்ததால் அடர்ந்த முட்புதர்க்கு அழைத்து சென்று கல்லால் அடித்துக் கொன்றதாக போல்தேவ் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
அதன் பேரில் அசாமைச் சேர்ந்த போல் தேவை கைது செய்த பொலிஸார் மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.