முத்த மழை பாடலை சின்மயி பாடிய பொழுது அவருடன் இணைந்து பாடிய பிண்ணனி பாடகி பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
38 ஆண்டுகளுக்கு பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப்.
இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவர் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக தக் லைஃப் திரைப்படத்தில் வரும் “முத்த மழை” பாடலை தமிழில் பாடகர் தீ பாடியிருந்தார்.
அந்த பாடலை அண்மையில் நடைபெற்ற “தக் லைஃப்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்தார். சின்மயி குரலில் கேட்கும் பொழுது முத்த மழை பாடல் முற்றிலும் வேறுவிதமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் “முத்த மழை” பாடலை சின்மயி பாடிக்கொண்டிருந்த பொழுது அவருக்கு கோரஸ் கொடுக்கும் குழு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்தக் குழுவில் பாடிய பாடகர்கள் யார் என ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அமீனா ரஃபீக். பற்றிய பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
கோரஸ் குழுவில் நடுவில் கருப்ப நிற ஆடை அணிந்து கொண்டு பாடிய அமீனா ரஃபீக் பின்னணி பாடகி.
இவர், தனியிசை கலைஞராகவும் நிறைய ஆல்பம் பாடல்களில் பணியாற்றியுள்ளார். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்பதால் ரஹ்மானின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர் மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான “மைதான்” திரைப்படத்தில்வரும், என் தலைவன் சேர்ந்தான் என்னை.. என்ற பாடலையும் பாடியுள்ளார். அதே வேளையில், “காதலிக்க நேரமில்லை” படத்திலும் பாடல்கள் பாடியிருக்கிறார்.