சற்று முன் யாழில் விபத்து-இருவருக்கு நேர்ந்த துயரம்..!

 


யாழ்.தென்மராட்சி வரணிப்பகுதியில் இன்று  விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

வரணி வேம்பிராய் வீதியில் இயற்றாலைப் பகுதியில் இன்று காலை 8.மணியளவில் இவ்விபத்து சம்பவித்துள்ளது

அதாவது வேம்பிராய் வீதியால் வரணிப் பகுதி நோக்கி பயணித்த  கழிவகற்றும் பவுசர் வாகனம் தும்புருவில் வீதியால் திரும்பிச் செல்ல முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பவுசருடன் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிள் சேதங்களுக்குள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post