கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் வென்னப்புவை கொலிஞ்சடிய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (06) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்
விபத்து சம்பவித்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற முதியவர் பலத்த காயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் வேனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.