விமான விபத்தில் தப்பியவரின் குடும்பத்திலும் பேரிடி-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

 

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 புறப்பட்டது.

இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்தில் சிக்கியதில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்பட 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 242 பேர் பயணித்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த விஷ்வாஷ் குமார் ரமேஷ் மட்டுமே நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஷ்வாஷ் குமார் ரமேஷ் என்றாலும், தனது சகோதரர் அஜய் குமார் ரமேஷ் அதே விமானத்தில் பயணம் செய்து உயிரிழந்த துக்கத்திற்கு இடையில் துவண்டு போய் உள்ளது அந்த குடும்பம்.

இது குறித்து இங்கிலாந்தில் உள்ள மத்திய லெய்செஸ்டரில் உள்ள வீட்டில் அவரது உறவினர் ஹிரென் காந்திலால் (19) செய்தியாளர்களிடம் கூறும் போது ''விஸ்வாஷ் உயிர் பிழைத்த தகவல் மகிழ்ச்சி தரக்கூடியது தான் என்றாலும், மறுபுறம் அஜய் குறித்து நாங்கள் மனம் உடைந்துள்ளோம்.

ரமேஷ் தன் மனைவி மற்றும் மகனுடன் தொலைவில் வசிக்கிறார். இங்கிலாந்தின் பழமையான நகரம் ஒன்றில் அஜய் வசித்து வந்தார். மேலும் இரண்டு சகோதரர்களும் சேர்ந்து ஒரு மிட்டாய் தொழில் நடத்தினர்.

இவர்கள் மிகவும் சிறந்த மனிதர்கள். என் வாழ்க்கையில் நான் பார்த்ததிலேயே சிறந்த மனிதர்கள் இவர்கள் தான். இந்தியாவில் சில வாரங்கள் விடுமுறையை கழித்த பிறகு இங்கிலாந்து திரும்பி கொண்டிருந்தனர். குடும்பத்தினர் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக கேட்விக் விமான நிலையத்தில் காத்திருந்தனர்" என்று உறவினர் ஹிரென் காந்திலால் கூறினார்.

விமானம் விபத்துக்குள்ளான சிறிது நேரத்தில் விஷ்வாஷ் குமார் ரமேஷ் தனது தந்தைக்கு போன் செய்து, ''நாங்கள் பயணம் செய்த விமானம் விபத்தில் சிக்கி விட்டது. நான் உயிருடன் உள்ளேன். எனது சகோதரனை தேடுகிறேன். வரிசையின் மறுமுனையில் சகோதரர் அஜய் அமர்ந்து இருந்தார்.

விமானத்தில் இருந்து எப்படி வெளியேறினேன் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை பற்றி கவலைப்பட வேண்டாம். அஜய் குமாரை பற்றிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன்" என்று விஷ்வாஷ் குமார் ரமேஷ் கூறியதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நான் என் சகோதரனுக்காக காத்திருக்கிறேன். நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன். எனது சகோதரனை தேடி சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் காத்திருந்தேன். பின்னர் மீட்பு படையினரால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்." என, விஷ்வாஷ் குமார் ரமேஷ் தெரிவித்ததாக காந்திலால் கூறினார்.

மேலும் காந்திலால் கூறும் போது, ''அவரது சகோதரர் அஜயை தொடர்பு கொள்ள அவரது பெற்றோரும் தீவிரமாக முயன்றனர். அழைப்பு சென்று கொண்டிருந்தது. ஆனால் யாரும் அழைப்பை ஏற்கவில்லை," என்று கூறினார்.

 முன்னதாக, விமான விபத்தில் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஷ்வாஷ் குமார் ரமேஷை பிரதமர் மோடி மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார்.

மருத்துவமனையில் இருக்கும் விஷ்வாஷ் குமார் ரமேஷ் கூறும் போது, ''எல்லாம் என் கண்முன்னே நடந்தது. அதிலிருந்து நான் எப்படி உயிருடன் வெளியே வந்தேன்? என்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை" என்று விஷ்வாஷ் குமார் ரமேஷ் மருத்துவமனையின் படுக்கையில் இருந்தபடி கூறியுள்ளார்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post