பதுளையில் இளைஞன் தவறான முடிவு..?

 பதுளை, தல்தென்ன இளம் கைதிகள் சீர்த்திருந்த நிலையத்தில் முயற்சித்த 30 வயதுடைய நபர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிக்சை பலனின்றி நேற்று  (14) உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் இலக்கம் P 09, வெனிவெல்கடுவ, அலவ்வ பகுதியை சேர்ந்த நபர் ஆவார்.

சிறையில் இளைஞன் செய்த விபரீத செயல் ; பரிதாபமாக பறிபோன உயிர் | Deaths Continue In Prison Another Youth Dies

குறித்த நபர் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் தன்கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 6 ம் திகதி மாளிகாத்தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் 5,000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துவதற்கு நீதிவான் உத்தரவிட்டார்.

தண்டப்பணத்தை செலுத்தாதமையின் காரணத்தினால், மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தல்தென்னை இளம் கைதிகளின் சிறையில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 16 ஆம் திகதி குறித்த நிலையத்தில் உள்ள கட்டிடத்தில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொள்ள செய்து கொள்ள முயற்சித்த வேளையில், சிறை அதிகாரிகளால் குறித்த நபர் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதன், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பதுளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்படுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.