உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கிறதா-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

 

நாட்டில் அறிவிக்கப்பட்ட 15% மின்சார கட்டண உயர்வு, நாடளாவிய அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகிவிடும் என தேசிய நுகர்வோர் முன்னணி தலைவர் அசேல சம்பத் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மின்சாரம் பற்றிய அதிக செலவுகள், உணவுத் தயாரிப்பு மற்றும் விநியோகச் செலவுகளை நேரடியாக பாதிக்கும். இதன் விளைவாக, அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும்.

வாழ்க்கைச் செலவு ஏற்கனவே உயர்ந்துள்ள சூழலில், பல குடும்பங்கள் போஷக்கூறுகளான உணவுகளை கொள்வனவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, அண்மையில் அதிகரித்துவரும் தொற்றா நோயாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம், விலை உயர்வுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க விலைக் கட்டுப்பாடுகள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வு மூலமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம் விளக்கம் தர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post