அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுதட்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கும், சகோதரனுக்கும் போதை மாத்திரைகளை கொண்டு சென்றதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது கைதுசெய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் - மஹவிலச்சி பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடையவர் ஆவார்.இது தொடர்பில் தெரியவருவதாவது,
கைதுசெய்யப்பட்ட பெண்ணின் கணவரும் சகோதரனும் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டிலெ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த பெண் தனது கணவரையும் சகோதரனையும் சந்திப்பதற்காக உணவு பொதியுடன் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.