தமிழர் பகுதி காடொன்றில் நடந்த கூத்து-தட்டி தூக்கிய பொலிசார்..!

 

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாஹூகல, கொடவெஹெர வனப் பகுதியில் பொத்துவில் பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (1) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 40 மற்றும் 41 வயதுடைய பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post