கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அவிசாவளை டிப்போ பேருந்தொன்று இன்று (02) விபத்துக்குள்ளானதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
திடீரென ஏற்ட்ட இயந்திர கோளாரே விபத்துக்கான காரணம் என நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பேருந்து செங்குத்தான சரிவில் மோதி விபத்துக்குள்ளானதோடு, விபத்து நடந்த நேரத்தில் சுமார் 20 பயணிகள் அதில் பயணித்துள்ளதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் குறிப்பிட்டனர்.
பேருந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, வீதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.