செம்மணி புதைகுழி தொடர்பில் சற்று முன் நீதியமைச்சர் வெளியிட்ட தகவல்..!

 

செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழு அகழ்வு குறித்து விசேட கரிசனைகளைக் கொண்டிருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செம்மனி சிந்துபாத்தி இந்து மயாணத்தில் நடைபெற்றுவரும் அகழ்வில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும், முழுமையாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக  அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சியின்போது கண்டறியப்படும் அனைத்து மனித எச்சங்களும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். 

அதன்பின்னர் பகுப்பாய்வு அறிக்கைகளின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூற முடியும்.

நீதிமன்றத்தின் அனுமதியில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதுகுறித்து வழக்குகளும் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன. ஆகவே நீதிமன்றம் தான் இறுதியான முடிவினை எடுக்கும்.

எவ்வாறாயினும் உண்மைகள் கண்டறியப்படுவதற்காக தொடர்ச்சியான அகழ்வுப்பணிகளுக்காக நீதி வழங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அரசதரப்பில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதோடு விசேட கரிசனைகளையும் கொண்டிருக்கின்றோம் என்றார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post