.jpeg)
இரத்தம் கசிந்த நிலையில், ஒரு சூட்கேஸில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (07) இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சிறுமியின் முகத்தில் காயங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அறிகுறிகளும் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி அருகில் உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்று 2 மணி நேரமாக திரும்பாததால் பெற்றோர் அவளை தேடத் தொடங்கினர். நேரில் பார்த்தவர்கள், சிறுமி அவளது வீட்டுக்கு 200 மீட்டர் தள்ளியுள்ள பக்கத்து வீட்டில் நுழைவதை கண்டதாக தெரிவித்தனர்.
எனவே சிறுமியின் தந்தை பக்கத்து வீட்டின் இரண்டாம் தளத்தில் உள்ள பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சூட்கேஸில் இரத்த வெள்ளத்தில், அரை நிர்வாணமாகக் கிடந்த தனது மகளை தந்தை கண்டார்.
இக்குற்றத்தை அப்பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்களே செய்ததாகக் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு டெல்லி, காஜியாபாத், மீரட், அலிகர் ஆகிய இடங்களில் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பீதியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தலைநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கடுமையான கவலை ஏற்பட்டுள்ளது.